Namma Madurai App Namma Madurai App
மதுரை அரசு மருத்துவமனையில் மீண்டும் வார்டு எண்கள் மாற்றம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மதுரை அரசு மருத்துவமனையில் மீண்டும் வார்டு எண்கள் மாற்றம்

38 days ago 10 Mar 2026

Share this story

மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வார்டு எண்கள் 4ம் முறையாக மாற்றப்படுகின்றன. டீனாக ரத்தினவேல் இருந்தபோது அறுவை சிகிச்சை அரங்குக்கான 'ஜெய்க்கா' வளாகம் கட்டப்பட்டதால் 2 ஆண்டுகளுக்கு முன் மதுரை அரசு மருத்துவமனை வளாகம், தீவிர விபத்துப்பிரிவு, பல்நோக்கு சிறப்பு வளாகங்களில் உள்ள வார்டு எண்கள் மாற்றப்பட்டன.
அடுத்தடுத்து 2 முறை வார்டு எண்கள் மாற்றப்பட்டதால் நர்ஸ், டாக்டர்கள், பிற பணியாளர்களுக்கும் வார்டு எண்களை சொல்வதில் குழப்பம் ஏற்பட்டது. பல இடங்களில் மருத்துவப்பணியாளர்கள் பழைய வார்டு எண்களை மட்டுமே தெரிவித்ததால் நோயாளிகளுக்கு எந்த வார்டு எங்குள்ளது என தெரியவில்லை. மருத்துவமனை பணியாளர்களும் வார்டைச் சொல்வதில் குழப்பம் அடைந்தனர். இதற்கு மாற்றாக டீன் அருள் சுந்தரேஷ்குமார் 4 இலக்க எண்களை வார்டுகளுக்கு குறிப்பிட்டு மாற்றம் செய்துள்ளார்.
பழைய மகப்பேறு வார்டு வளாகம் 1000ல் இருந்து தொடங்குகிறது மெயின் வளாகம் 2000ல் இருந்தும், மகப்பேறு வார்டுக்கு 3000, புற்றுநோய் பிரிவுக்கு 4000, குழந்தைகள், மனநலப்பிரிவுக்கு 5000, புதிய குழந்தைகள் நலப்பிரிவுக்கு 6000, ஜெய்க்கா வளாகத்திற்கு 7000, தீவிர விபத்துப் பிரிவிற்கு 8000, பல்நோக்கு வளாகத்திற்கு 9000 என்ற எண்களில் தொடங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் எண் வளாகத்தையும் அடுத்த எண் எந்த தளம் என்பதையும் அதற்கு அடுத்த எண் எந்த வார்டு என்பதையும் குறிக்கும். மருத்துவமனை சுவர்களில் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த வார்டு எண்கள் தற்போது அழிக்கப்பட்டு புதிய எண்கள் எழுதப்படுகின்றன.

Namma Madurai

Local News & Updates

More News