Namma Madurai App Namma Madurai App
மதுரை சித்திரை திருவிழா ஏப். 19ல் தொடக்கம் மே 1ல் வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மதுரை சித்திரை திருவிழா ஏப். 19ல் தொடக்கம் மே 1ல் வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்

36 days ago 12 Mar 2026

Share this story

மதுரையில் விண்ணும் மண்ணும் வியக்கும் வண்ணம் நடைபெறும் சித்திரைத் திருவிழா, இந்தாண்டு ஏப்.19ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான வைகையில் கள்ளழகர் இறங்கும் வைபலம், மே 1ல் நடக்கிறது. கொடியேற்றம் முன்னதாக ஏப்.18ல் வாஸ்து சாந்தி செய்யப்படுகிறது. ஏப்.19 காலை 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளது. அன்று இரவு 7:00 மணிக்கு கற்பக விருட்சம், சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏப். 20, 21ல் காலை 7:00 மணிக்கு தங்கச் சப்பரம், இரவு 7:00 மணிக்கு பூதம், அன்னம், கைலாச பர்வதம், காமதேனு வாகனத்தில் சுவாமி உலா நடைபெறும். ஏப். 22ல் காலை 9:00 மணிக்கு பாவக்காய் மண்டகப்படியிலும், மாலை 6:00 மணிக்கு சுவாமி தங்கப்பல்லக்கு புறப்பாடு நடைபெறும்.

ஏப். 23ல் ராமாயணச்சாவடியில் சுவாமி தங்கச்சப்பரம், இரவு 7:00 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் வேடர் பரி லீலை நடக்கிறது. ஏப் 24, 25ல் காலை 8:00 மணிக்கு சுவாமி தங்கச்சப்பரம், இரவு 7.00 மணிக்கு ரிஷப வாகனத்தில் சைவ சமய ஸ்தாபித லீலை, நந்திகேஸ்வரர், யாழி வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. திருக்கல்யாணம் ஏப். 26 காலை 10:00 மணிக்கு தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு. இரவு 7:05 மணிக்கு மேல் 7:29 மணிக்குள் மீனாட்சி பட்டாபிஷேகம் நடக்கிறது. இரவு 9.00 மணிக்கு வெள்ளிச் சிம்மாசனத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. ஏப். 27 காலை 8.00 மணிக்கு மரவர்ண சப்பர புறப்பாடு, மாலை 6:00 மணிக்கு இந்திர விமானத்தில் மீனாட்சி திக்விஜயம் செல்கிறார். ஏப். 28 அதிகாலை 4.00 மணிக்கு வெள்ளிச் சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, காலை 8:35 மணிக்கு மேல் 8:59 மணிக்குள் மீனாட்சி -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது இரவு 7:30 மணிக்கு தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனம், புஷ்ப பல்லக்கு புறப்பாடு நடக்கிறது.

ஏப். 29 அதிகாலை 5:05 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரில் எழுந்தருளி, காலை 6:00 மணிக்கு வடம் பிடிக்கப்படுகிறது. இரவு 7:00 மணிக்கு சப்தாவர்ண சப்பரத்தில் உலா நடக்கிறது. ஏப். 30ல் காலையில் தீர்த்தவாரி, இரவு 7:00 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. மே 1 அதிகாலை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் நடைபெற உள்ளது

Namma Madurai

Local News & Updates

More News