Namma Madurai App Namma Madurai App
விழிப்புணர்வு ஊர்வலம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

விழிப்புணர்வு ஊர்வலம்

57 days ago 19 Feb 2026

Share this story

திருமங்கலம்: திருமங்கலத்தில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு, தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் போதை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கலால் உதவி கமிஷனர் பச்சமுத்து துவக்கி வைத்தார். மதுவிலக்கு டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமை வகித்தார்.
நுகர்வோர் மையத் தலைவர் கர்ணன், கலால் அலுவலர் ஹேமலதா, வன அலுவலர் ராஜா, வருவாய் ஆய்வாளர் செந்தில்குமரன், நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த முத்துக்குமார், பாண்டியராஜன் கலந்து கொண்டனர். மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Namma Madurai

Local News & Updates

More News