Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மதுரையில் நூறு நாள் திட்டத்தில் நடந்தபணிகளுக்கு பாக்கி; ஊரகவளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டட ஒப்பந்ததாரர்கள்.
9 days ago
02 Sep 2026
மதுரை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) மூலம் கிராமப்புறங்களில் பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பேவர் பிளாக் சாலை, சிமென்ட் சாலை, ரேஷன் கடை, அங்கன்வாடி, சத்துணவு மையம், மெட்டல் சாலை போன்ற பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளை முடித்த ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் / வெண்டர்கள், தங்களுக்கு வழங்க வேண்டிய பணத் தொகை பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 2023–24 மற்றும் 2024–25 ஆண்டுகளில் முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகை இன்னும் கிடைக்கவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ.129.74 கோடி அளவுக்கு பணம் வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, நிலுவைத் தொகையை விரைவாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மாவட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்டோர் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்தி தெரிவிக்கிறது.
Namma Madurai
Local News & Updates