Namma Madurai App Namma Madurai App
மதுரை தேவாலயங்களில் புனித வெள்ளி வழிபாடு
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மதுரை தேவாலயங்களில் புனித வெள்ளி வழிபாடு

13 days ago 04 Apr 2026

Share this story

மதுரை கிறிஸ்தவர்களின் புனிதவெள்ளியைத் தொடர்ந்து மதுரை சர்ச்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
புனித வெள்ளி தினத்தையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வியாழன் மாலை முதல் நேற்று மதியம் 3:00 மணி வரை தொடர்ந்து ஆராதனைகள் நடந்தன தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் சிலுவைப்பாதை ஜெபவழிபாடுகளும், தொடர்ந்து சிறப்பு திருப்பலி பூஜைகளும் நடந்தன.
அதேபோல சி.எஸ்.ஐ. தேவாலயங்கள் மற்றும் சபைகளில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது பேசிய 7 வார்த்தைகள் குறித்து மறையுரைகள் நடத்தப்பட்டு ஆராதனைகள் நடந்தன.
மதுரையில் கத்தோலிக்க திருச்சபைகளில் கீழவாசல் செயின்ட் மேரீஸ் ஆலயம், ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலயம், அஞ்சல் நகர் விடா சகாய அன்னை ஆலயம், பாஸ்டின் நகர் துாய பவுல் ஆலயத்திலும், நரிமேடு சி.எஸ்.ஐ, கதீட்ரல் பேராலயத்திலும் நடந்த ஆராதனைகளில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Namma Madurai

Local News & Updates

More News