Namma Madurai App Namma Madurai App
திருமங்கலத்தில் குடிநீர் நிறுத்தம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

திருமங்கலத்தில் குடிநீர் நிறுத்தம்

34 days ago 14 Mar 2026

Share this story

திருமங்கலம் நகராட்சிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 25 லட்சம் லிட்டர் தண்ணீரும், வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக 15 லட்சம் லிட்டர் தண்ணீரும் தினசரி வழங்கப்படுகிறது.
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் குழாய்களை மாற்றியமைக்கும் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் மார்ச் 14 முதல் மார்ச் 18 வரை காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வழங்கும் தண்ணீர் வராது.
இதனால் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும். இதற்கு மாற்று ஏற்பாடாக வைகை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் கூடுதல் தண்ணீர் பெறப்பட்டு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) அசோக்குமார் தெரிவித்தார்.

Namma Madurai

Local News & Updates

More News