Namma Madurai App Namma Madurai App
அனிமல் பாஸ் ஓவர் பாலத்தில் தடுப்பு வேலி
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

அனிமல் பாஸ் ஓவர் பாலத்தில் தடுப்பு வேலி

32 days ago 16 Mar 2026

Share this story

வாடிப்பட்டி - தாமரைப்பட்டி இடையே நான்கு வழிச்சாலையாக அமைகிறது 'அவுட்டர் ரிங்' ரோடு. இது வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டி, பூச்சம்பட்டி இடையே வகுத்துமலை- வண்ணாத்திக் கரடு நடுவாக செல்கிறது. இப் பகுதியில் காட்டு எருமை, பன்றி போன்ற வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது.
அவை வாகனங்களின் இடையூறு இல்லமால் மலைகளுக்கு இடையே கடந்து செல்ல தமிழகத்தின் முதல் 'அனிமல் பாஸ் ஓவர் மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்தது.அதற்கு தமிழக வனத்துறை 2022ல் அனுமதி வழங்கியது. தொடர்ந்து துவங்கிய பால கட்டுமான பணிகள் 2025ல் முடிந்தது. கான்கிரீட் பாலத்திற்கு இருபுறமும் மலையுடன் இணைக்க இயந்திரங்கள் மூலம் மண் நிரப்பபட்டது.
இதனை தொடர்ந்து பாலத்தின் மேல் பகுதியில் இருபுறமும் வாகனங்களின் இரைச்சல் சத்தம் இன்றி வன விலங்குகள் கடந்து செல்ல ஒளி, ஒலி தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடக்கிறது. மேலும் சாலையின் நடுவே 'சென்டர் மீடியனில்' செடிகள், மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

Namma Madurai

Local News & Updates

More News