Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மதுரை மாவட்டத்தின் பத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு 80.55 சதவீதம்: கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வம்
40 days ago
24 Apr 2026
மதுரை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்காக 1200 அமைவிடங்களில் 3079 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இத்தேர்தலில் 14 ஆயிரத்து 700 ஊழியர்கள் ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றினர். பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர். தேர்தல் நாளில் ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க 350க்கும் மேற்பட்ட மைக்ரோ அப்சர்பர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். நேற்று காலை 7.00 மணி முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் ஓட்டுக்களை பதிவு செய்தனர். கோடை வெயில் கொளுத்தியதால் எல்லா ஓட்டுச்சாவடிகளிலும் கூட்டம் காலையிலேயே அலைமோதியது.
இதனால் ஓட்டுப்பதிவு சதவீதம் வேகமாக அதிகரித்தது. முதல் 2 மணி நேரத்தில் 17 சதவீதம் (435 லட்சம் ஓட்டுகள்) பதிவாகி இருந்தன. இந்த விறுவிறுப்பு மாலை வரை தொடர்ந்தது. மாலை 6:00 மணியளவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓட்டுக்களை பதிவு செய்ய காத்திருந்தனர்.
அவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கி ஓட்டுப்பதிவு தொடர்ந்தது. ஆறு மணிக்குப் பின் வந்தவர்களை ஓட்டுப்பதிவுக்கு அனுமதிக்கவில்லை.
Namma Madurai
Local News & Updates