மேலுார் அருகே கீழையூர், கீழவளவு, செமினிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கின. செமினிபட்டியில் ரோட்டில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கவே கிராம மக்கள் அகற்றினர்.
சிறிது நேரத்தில் போக்குவரத்து சீரானது. மழையினால் கண்மாய், குளங்களில் தண்ணீர் ஓரளவு நிரம்பியது. கால்நடைகளின் குடிநீர் பஞ்சம் சற்று குறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Namma Madurai
Local News & Updates