Namma Madurai App Namma Madurai App
கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு நீர்வரத்து கால்வாயை சீரமைக்க நீதிமன்றம் உத்தரவு
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு நீர்வரத்து கால்வாயை சீரமைக்க நீதிமன்றம் உத்தரவு

18 days ago 16 May 2026

Share this story

மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு ஆற்றிலிருந்து சுத்தமான நீரை கொண்டுவந்து, நீர்வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து விசாரித்த வழக்கில் உத்தரவிட்டது. தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதியில் போதிய பொதுக் கழிப்பறைகள், குப்பைத் தொட்டிகள் நிறுவ வேண்டும் மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் குழாய்களை தனித்தனியாக அமைக்க வேண்டும். பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சுகாதாரமான சூழலை உறுதி செய்ய வேண்டும். தெப்பக்குளத்தை பண்டைய மற்றும் வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் இடங்கள் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க தமிழக தொல்லியல்துறை செயலர், அறநிலையத்துறை கமிஷனர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், கோயில் செயல் அலுவலருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார் இதை தானாக முன்வந்து விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வந்தது.
இந்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி கழிவுநீரை குளத்திற்குள் கலக்கவிட சில தனிநபர்களால் அமைக்கப்பட்ட குழாய்கள் கண்டறியப்பட்டன அத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மாநகராட்சி உதவி கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்தார் குளத்தில் கழிவுநீர் கலப்பது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குளத்தின் நான்கு புறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேலி அமைக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பு தெரிவித்தது அதை உறுதிப்படுத்தும் வகையில் சில போட்டோக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் முறையாக, முழுமையாக நிறைவேற்றப்பட்டதில் திருப்தியடைகிறோம் தற்போதைய நிலையில் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து பராமரிக்க வேண்டும் இதை தனிநபர்கள் யாரும் மீறினால், மாநகராட்சி தரப்பில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுச்சுவர் சீரமைப்பு குளத்தின் சேதமடைந்த சுற்றுச்சுவரை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என கோயில் நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதை இந்நீதிமன்றத்தின் சுவனத்திற்கு கொண்டுவர, இவ்வழக்கின் தரப்பினருக்கு உரிமை உண்டு குளத்திற்கு துாய்மையான: நீரை கொண்டுவருவதற்காக நீர்வளத்துறையுடன் ஒருங்கிணைந்து மாநகராட்சி நிர்வாகம் குழாய்களை பதிக்க வேண்டும் ஆற்றிலிருந்து சத்தமான நீரை கொண்டுவந்து குளத்திற்கான நீர்வரத்து கால்வாயை சீரமைக்க வேவண்டும் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

Namma Madurai

Local News & Updates

More News