Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
தரையில் சாய்ந்த நெற்கதிர்களால் தலைநிமிர முடியாத விவசாயிகள்
28 days ago
20 Mar 2026
சோழவந்தான் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்ததால் அப்பகுதி விவசாயிகள் சோகமடைந்தனர். இங்கு மேட்டுநீரேத்தான், முள்ளிப்பள்ளம், ஆலங்கொட்டாரம் உள்பட சுற்றுவட்டாரத்தில் பல நுாறு ஏக்கர் வைகைப் பெரியாறு பாசனத்தில் 2ம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டது. சில நாட்களாக பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் தரையில் சாய்ந்தும், நெல்மணிகள் உதிர்ந்தும் வீணாகின
மேட்டு நீரேத்தான் விவசாயிகள் முருகேசன், கணேசன், கிருஷ்ணன் கூறியதாவது: இப்பகுதியில் 300 ஏக்கருக்கும் மேலாக நெல் சாகுபடி செய்துள்ளோம். விவசாயிகளில் பலர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்கின்றனர். அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் ஆலங்கட்டி மழை அனைத்தையும் கெடுத்து விட்டது. பல ஏக்கரில் நெற்கதிர்கள் தரையில் படுத்து விட்டது.
நெல்மணிகள் உதிர்ந்து சகதியுடன் கலந்துவிட்டன. எஞ்சி இருக்கும் பயிரை அறுவடை செய்தால் கூலி கூட மிஞ்சாது. நஷ்டம் மட்டுமின்றி, குத்தகைத் தொகையை செலுத்தக்கூட கடன் வாங்கும் நிலை உள்ளது. அரசு நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
Namma Madurai
Local News & Updates