மதுரை உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, மதுரை கலைஞர் நுநூற்றாண்டு நுாலகத்தில் 'கதை மாரத்தான்' உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், கின்னஸ் உலக சாதனை புத்தகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, சிறார் எழுத்தாளர் மாவட்ட தலைவர் நஜூமுதீன் தலைமை வகித்தார். மாநில தலைவர் உதயசங்கர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரகுபதி, மணியம்மை பள்ளி தாளாளர் வரதராசன் முன்னிலை வகித்தனர்.
100 குழந்தைகள் தொடர்ச்சியாக 100 கதைகளை கூறி கின்னஸ் சாதனை படைத்தனர். மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. கவிஞர் கணேசன், ஆசிரியர்கள் சிவா, சரவணன், எழுத்தாளர் அமுதா செல்வி, அனுசுயா, பாரதி இலக்கியப் பேரவை முருகன், திருக்குறள் வளர்ச்சிப் பட்டறை விஸ்வநாததாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
Namma Madurai
Local News & Updates