மதுரையில் நேற்று மாலை வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில், இரவு நகரின் பல்வேறு பகுதிகளில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஒத்தக்கடை உள்ளிட்ட நகரின் வெளிப்புறப் பகுதிகளிலும் மழை பெய்ததாக தினமலர் செய்தி தெரிவிக்கிறது.
சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். கடுமையான வெப்பத்திற்குப் பிறகு பெய்த மழை, மதுரை மக்களுக்கு சற்று குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியது.
Namma Madurai
Local News & Updates