Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
விரகனுார் மதகணை புனரமைப்பு ஆக. 31ல் பணிகள் முடியும்
44 days ago
29 Jul 2026
வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள விரகனுா ர் மதகணையின் கதவு, ஷட்டர், உபகரணங்களை மாற்றி புனரமைக்கும் பணிக்காக ரூ.33 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் பணி நடக்கிறது.வைகை கால்வாய் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 1968 ல் ரூ.3.94 கோடி மதிப்பீட்டில் விரகனுார் மதகணை கட்டப்பட்டு 1973 முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்த மதகணை மூலம் வைகையாற்று நீரை இடது, வலது பிரதான கால்வாய்களுக்கு திருப்பி வைகை பூர்வீக பாசன பகுதி 2 ல் உள்ள 87 கண்மாய்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதன் மூலம் 40ஆயிரத்து 743 ஏக்கர் பாசனம் நடக்கிறது.
வைகையில் வெள்ளம் வரும் போது கிருதுமால் வடிநிலங்களுக்கு இதன் மூலம் வெள்ளநீரை திருப்ப முடியும். 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மதகணையின் கதவுகள் வளைந்து துளைகள் ஏற்பட்டுள்ளது.
மின் உபகரணங்கள், இயந்திர உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. வெள்ளநீர் வரும் போதும், அவசர காலத்திலும் மதகின் கதவுகளை முழுமையாக இயக்க முடியாததால் இடது, வலது பிரதான கால்வாய்களில் தண்ணீரை பகிர்வதில் சிரமம் ஏற்பட்டது.
மின் உபகரணங்கள், இயந்திர உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. வெள்ளநீர் வரும் போதும், அவசர காலத்திலும் மதகின் கதவுகளை முழுமையாக இயக்க முடியாததால் இடது, வலது பிரதான கால்வாய்களில் தண்ணீரை பகிர்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து மதகணை சார்ந்த அனைத்தையும் புனரமைக்கும் வகையில் ரூ.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் கூறுகையில்,''தற்போது 85 சதவீத பணிகள் முடிந்துள்ளன. ஷட்டர்கள் பொருத்தும் பணி நடக்கிறது. இரும்பு பைப், கைப்பிடி சுவர், தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. ஆக. 31க்குள் பணிகள் முடிந்துவிடும்'' என்றார்.
Namma Madurai
Local News & Updates