Namma Madurai App Namma Madurai App
வைகை வடகரையில் 8 கி.மீ.,க்கு புதிய ரோடு பணிகள் துவக்கம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

வைகை வடகரையில் 8 கி.மீ.,க்கு புதிய ரோடு பணிகள் துவக்கம்

44 days ago 04 Mar 2026

Share this story

மதுரை வைகை வடகரையில் ரூ.120 கோடி செலவில் புதிதாக கி.மீ. ரோடு அமைக்கும் பணிகளை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.மதுரையின் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க வைகை கரையோரம் இருபுறமும் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது சமயநல்லூர் முதல் ரிங்ரோடு வரை 16 கிமீ. தொலைவுக்கு தற்போது ரோடு உள்ளது இதேபோல தென்கரை பகுதியில் ரிங்கோடு விராதனூர் ரவுண்டானா முதல் ஆரப்பாளையம் வரை கரையோரம் ரோடு அமைத்துள்ளது.
இந்நிலையில் ரிங்ரோட்டை தாண்டி வைகையின் வடகரையில் தற்போது விராதனூர் பகுதி முதல் சக்குடி வரை சிவகங்கைக்கு செல்லும் வகையில் 8 கி.மீ, ரோடு ரூ.120 கோடி செலவில் புதிதாக அமைய உள்ளது. ஆண்டார்கொட்டாரம், கல்மேடு, கருப்பப் பிள்ளையேந்தல், சக்கிமங்கலம், கார்சேரி, இளமனூர், சக்குடி வழியாக இந்த ரோடு செல்கிறது. இதனால் மதுரை சிவகங்கை சாலையில் நெரிசல் குறையும்.
இப்பணிகளை அமைச்சர் மூர்த்தி நேற்று துவக்கி வைத்தார். கலெக்டர் பிரவீன்குமார். வெங்கடேசன் எம்.எல்.ஏ. நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பிரசன்னவெங்கடேசன், உதவி கோட்டப் பொறியாளர் ஆனந்த் பங்கேற்றனர். இந்த ரோட்டில் ரூ40 கோடி செலவில் 3.5 கி.மீக்கு ரோடு கையகப்படுத்தப்பட உள்ளது.ஏழு மீட்டர் அகலத்துடன் இருவழிச்சாலையாக அமையும் இப்பணியில் 4 சிறுபாலங்கள், 20 பெட்டிபாலங்கள் கட்டப்படும் ஒன்றரை ஆண்டுகள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Namma Madurai

Local News & Updates

More News