Namma Madurai App Namma Madurai App
நாளை திருப்பரங்குன்றம் செல்லும் பிரதமர் மோடி பயண விவரம் முழு விவரம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

நாளை திருப்பரங்குன்றம் செல்லும் பிரதமர் மோடி பயண விவரம் முழு விவரம்

48 days ago 28 Feb 2026

Share this story

மதுரை: பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறார். இன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடி, நாளை காலை புதுச்சேரி செல்கிறார். அதன்பிறகு அங்கிருந்து தஞ்சை வழியாக மதுரை செல்கிறார். மதுரையில் நாளை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்கிறார். பின்னர் மாலையில் மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
சட்டசபை தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பிரச்சாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டம் கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடந்தது. இதில் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். தற்போது இரண்டாம் கட்டமாக வருகிற 1ம் தேதி புதுச்சேரி, மதுரை என இரண்டு இடங்களில் நடைபெற போகிறது.
பின்னர் மாலை 4 மணி அளவில் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் செல்கிறார். அங்கு முருக பெருமான தரிசனம் செய்யும் பிரதமர் மோடிக்கு கும்பம் மரியாதை கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்படுகிறது. பின்னர் சாமி தரிசனம் முடித்துவிட்டு மாலை 4.30 மணி அளவில் மதுரை மண்டேலா நகர் சுற்றுசாலை பகுதியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி, பிரதமர் மோடி செல்லும் திருப்பங்குன்றம் கோவில் உள்பட பகுதிகள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட எல்லைக்குள் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆள் இல்லா வான்வழி வாகனங்கள் பறக்கவும் தடைவிதிக்கப்படடுள்ளது. மீறி ட்ரோனை பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Namma Madurai

Local News & Updates

More News