Back
CRIME & SAFETY NEWS
CRIME & SAFETY NEWS
மதுரையில் பெட்ரோல் குண்டு வீசிய பள்ளி மாணவர்கள் 5 பேர் கைது சமூகவலைதளங்களை பார்த்து 'கற்றுக்கொண்டதாக' வாக்குமூலம்
71 days ago
05 Feb 2026
மதுரை: மதுரையில் சக மாணவர் குறித்து போலீசில் புகார் செய்ததாக ஆத்திரமுற்ற பள்ளி மாணவர்கள் 5 பேர் உட்பட 7 பேர், பெட்ரோல் குண்டு வீசி மிரட்டியதாக கைது செய்யப்பட்டனர். சமூகவலைதளங்களில் வீடியோவை பார்த்து தயாரித்து வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஜன, 25 இரவு 3 இடங்களில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பிப்,2 இரவு ஜீவா நகரில் ஒரு வீட்டருகே உள்ள வேப்ப மரத்தின்மீது பெட்ரோல் குண்டு வீசியதோடு, அப்பகுதி டூவீலர்களை போதையில் சேதப்படுத்தியதாக பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் 5 பேர், படிப்பை பாதியில் நிறுத்திய 15 வயது சிறுவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டனர். அடுத்தடுத்து மதுரை நகரில் பெட்ரோல் குண்டு வீசுவது சர்வசாதாரணமாக நடப்பது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
போலீசார் கூறியதாவது: ஒரு பள்ளி மாணவனின் தாய்க்கும், ஜீவா நகரைச் சேர்ந்த 60 வயது நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருகுடும்பத்திலும் பிரச்னை ஏற்பட்டது. அந்த நபரை மாணவரும், அவரது நண்பரும் தாக்கியதாக கைது செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமுற்ற சக மாணவர்கள் உட்பட 7 பேர், புகார் கொடுத்த நபரை மிரட்டுவதற்காக டூவீலரில் இருந்து பெட்ரோலை திருடி குவார்ட்டர் பாட்டிலில் ஊற்றி பற்ற வைத்து வீட்டின் மீது வீசியுள்ளனர். அது தவறுதலாக வேப்ப மரம் மீது பட்டு எரிந்தது. கண்காணிப்பு கேமரா அடிப்படையில் மாணவர்களையும், 2 சிறுவர்களையும் கைது செய்தோம்.
சமூகவலைதளங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வீடியோக்களை பார்த்து தாங்களும் வீச முடிவு செய்ததாகவும், எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவ்வாறு கூறினர்.
சமூகவலைதளங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வீடியோக்களை பார்த்து தாங்களும் வீச முடிவு செய்ததாகவும், எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவ்வாறு கூறினர்.
Namma Madurai
Local News & Updates