Namma Madurai App Namma Madurai App
நுாறுநாள் வேலைத் திட்டத்தில் கைரேகையை வைத்து பதிய முடியல : வாழ்வாதாரம் இழப்பால் வேதனையில் தொழிலாளர்கள்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

நுாறுநாள் வேலைத் திட்டத்தில் கைரேகையை வைத்து பதிய முடியல : வாழ்வாதாரம் இழப்பால் வேதனையில் தொழிலாளர்கள்

27 days ago 21 Mar 2026

Share this story

சோழவந்தான் பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, 'பயோமெட்ரிக் குளறுபடிகளால் வேலை கிடைக்காமல் பாதிப்படைகின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. முன்பெல்லாம் தொழிலாளர்களுக்கான வருகையைப் பதிவு செய்ய பதிலேடு பயன்படுத்தப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன் ஆன்லைன் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழுவாக போட்டோ எடுத்து அப்டேட செய்யப்பட்டது.
வேலை இழப்பு இந்நிலையில் சில வாரங்களாக தனித்தனியாக தொழிலாளர் ஒவ்வொருவரின் கருவிழி, முகம் மொபைல் மூலம் படம் பிடிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது இதில் பலருக்கு ஆதார் 'பயோமெட்ரிக்' பதிவும், இந்தப் 'பயோமெட்ரிக் பதிவும் ஒத்து வராததால் வருகையை பதிவு செய்வதில் குளறுபடி ஏற்படுகிறது. இதனால் பணியாளர்கள் பலர் வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவேதனையில் தெரிவிக்கின்றனர். முள்ளிப்பள்ளம் அங்கம்மாள், பிச்சையம்மாள், உண்ணாமலை கூறியதாவது நுாறுநாள் வேலையை நம்பித்தான் எங்கள் வாழ்வாதாரமே உள்ளது ஆன்லைன் வருகைப் பதிவில் கருவிழி, முகம் ஒத்து வராததால் வேலை கிடைக்கவில்லை முன்பு மாற்று முறையில் வாரத்திற்கு ஒரு குழுவாக வேலை செயவோம் தற்போது இப்பிரசனையால் ஏற்கனவே வேலை செய்தவர்களுக்கே மீண்டும் மீண்டும் பணிகள் ஒதுக்கப்படுகிறது.
அப்டேட்' செய்யணும் வேலை கிடைக்காதவர்கள் வேறுவேலையும் இன்றி கடன் வாங்கி கஷ்ட ஜீவனம் நடத்துகிறோம். ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இப்பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்றனர். ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், "பணியாளர்களில் பலர் ஆதார் 'அப்டேட்' செய்யாததால் தற்போதுள்ள 'பயோமெட்ரிக்' உடன் கைரேகை ஒத்துப் போவதில்லை. வருகைப்பதிவு சிக்கலால் பணி வழங்க முடியவில்லை. இதுபோன்ற பணியாளர்கள் ஆதார் மையம் சென்று, தங்கள் 'பயோமெட்ரிக்' பதிவை புதுப்பிக்க வேண்டும்" என்றனர்.

Namma Madurai

Local News & Updates

More News