Back
TRAFFIC&TRANSPORTATION
TRAFFIC&TRANSPORTATION
புதிய ரயில்களின் கால அட்டவணை வெளியீடு.
36 days ago
12 Mar 2026
திருச்சியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ரயில்களுக்கான கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. நாகர்கோவில் - சர்லப்பள்ளி 'அம்ரித் பாரத்' இன்று (மார்ச் 12) முதல் வியாழன் தோறும் இரவு 11:45 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்படும் ரயில் (16357), சனிக்கிழமை அதிகாலை 4:20 மணிக்கு தெலுங்கானா மாநிலம் சர்லப்பள்ளி செல்லும். மறுமார்க்கத்தில் மார்ச் 14 முதல் சனி தோறும் காலை 8:15 மணிக்கு புறப்படும் ரயில் (16358), மறுநாள் மதியம் 3:35 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு செல்லும்.
திருநெல்வேலி - மங்களூரு மார்ச் 18 முதல் புதன் தோறும் மதியம் 3:45 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் (16708), மறுநாள் காலை 6:55 மணிக்கு கர்நாடக மாநிலம் மங்களூரு சந்திப்பு செல்லும் மறுமார்க்கத்தில் மார்ச் 19 முதல் வியாழன் தோறும் மதியம் 1:00 மணிக்கு புறப்படும் ரயில் (16707), மறுநாள் காலை 7:45 மணிக்கு திருநெல்வேலி செல்லும். ராமேஸ்வரம் - மங்களூரு மார்ச் 14 முதல் சனி தோறும் இரவு 7:30 மணிக்கு மங்களூரு சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் (16622), மறுநாள் காலை 10:50 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும். மறுமார்க்கத்தில் மார்ச் 15 முதல் ஞாயிறு தோறும் மதியம் 3:30 மணிக்கு புறப்படும் ரயில் (16621), மறுநாள் காலை 6:55 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் செல்லும்.
போத்தனுார்-தன்பாத் 'அம்ரித் பாரத்' மார்ச் 21 முதல் சனி தோறும் காலை 6:15 மணிக்கு போத்தனுாரில் இருந்து புறப்படும் ரயில் (16619), திங்கள் அதிகாலை 4:00 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் செல்லும், மறுமார்க்கத்தில் மார்ச் 23 முதல் திங்கள் தோறும் மதியம் 2:00 மணிக்கு புறப்படும் ரயில் (16620), புதன் காலை 11:20 மணிக்கு போத்தனுார் செல்லும் இவற்றுக்கான முன்பதிவு தொடங்கியது. மயிலாடுதுறை - காரைக்குடி மார்ச் 16 முதல் தினமும் மாலை 5:10 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் பாசஞ்சர் (56835), இரவு 9:55 மணிக்கு காரைக்குடி செல்லும் மறுமார்க்கத்தில் மார்ச் 17 முதல் தினமும் காலை 6:05 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் (56836), காலை 10:45 மணிக்கு மயிலாடுதுறை செல்லும்.
Namma Madurai
Local News & Updates