Namma Madurai App Namma Madurai App
மதுரை திருப்பரங்குன்றம் மலையை அளவிடும் பணி துவங்கியது
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மதுரை திருப்பரங்குன்றம் மலையை அளவிடும் பணி துவங்கியது

8 days ago 26 May 2026

Share this story

மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது சம்பந்தமான பிரச்னையை தொடர்ந்து, மலையை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.
மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மலையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். கடந்த மாதம், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி முன்னிலையில் நடந்த விசாரணையில், 'திருப்பரங்குன்றம் மலை முழுதையும் மத்திய தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும்.
முழு ஆய்வு நடத்தி, அறிக்கையை மே இறுதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' என, உத்தர விட்டிருந்தனர். இதன்படி, மத்திய தொல்லியல் துறை பொறியாளர் உமேஷ் தலைமையில், தொல்லியல் நிபுணர்கள் 5 பேர், வருவாய் துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் அளவீடும் பணியை நேற்று தொடங்கினர். டி.ஜி.பி.எஸ்., எனும் நவீன அளவிடும் கருவி மூலம் பணி நடக்கிறது. கோடாங்கி தோப்பு தெரு, பெரிய ரத வீதியிலிருந்து மலை மேல் செல்லும் பழனி ஆண்டவர் கோவில் தெரு,மலை அடிவாரத்திலுள்ள வீடுகள், சாவடி ஆகியவற்றை நேற்று அளவீடு செய்தனர். ஏழு நாட்கள் அளவீடு பணி நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Namma Madurai

Local News & Updates

More News