Namma Madurai App Namma Madurai App
விளாச்சேரியில் தயாராகும் களிமண் விநாயகர் சிலைகள்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

விளாச்சேரியில் தயாராகும் களிமண் விநாயகர் சிலைகள்

39 days ago 03 Aug 2026

Share this story

விநாயகர் சதுர்த்திக்காக மதுரை விளாச்சேரியில் களிமண்ணால் ஆன 'மெஹா ' விநாயகர்
சிலைகள் தயாராகின்றன.விநாயகர் சதுர்த்திக்காக 2 இஞ்ச் முதல் 8 அடி உயர களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படும். இந்தாண்டு கருட வாகன விநாயகர், நந்திகேஸ்வரர் கணபதி, காமதேனு விநாயகர், ரிஷப கணபதி, சிவ பூஜை கணபதி, தேரில் விநாயகர், சந்தான கணபதி உள்பட பல்வே று சிலைகள் களிமண்ணால் தயாரிக்கின்றனர். இச்சிலை களை தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் விநாயகர் சிலை ஊர்வலங்களில் பங்கேற்பதற்காக வாங்கிச் செல்கின்றனர்.

விஜயகுமார் கூறியதாவது: எங்கள் முன்னோர் கிராம திருவிழாக்களுக்காக களிமண்ணில் குதிரைகள்
தயாரித்தனர். தொடர்ந்து எனது தந்தையுடன், நானும் குடும்பத்துடன் விநாயகர் சிலைகள் தயாரித்து வருகிறேன்.
இரண்டு அடி உயரம்வரை களிமண், ஆற்று மணல் மூலம் சிலைகள் தயாரிக்க முடியும். அதற்கும் உயரமான சிலைகள் தயாரிக்க யானைச்சாணம் சேர்க்க வேண்டும். திருப்பரங்குன்றம் கோயில் யானை முகாம் சென்றுள்ளதால், அழகர்கோவிலில் சென்று வாங்கி வருகிறோம்.

Namma Madurai

Local News & Updates

More News