மதுரை: பிரதமரின் பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்யாத விவசாயிகளுக்காக இன்று (மே 15) முதல் ஜூன் 15 வரை, வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்தார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: வேளாண்மைத் துறை, அஞ்சல் துறை, இ-சேவை
(பொது சேவை) மையங்கள் இணைந்து இம்முகாமை நடத்துகின்றன. 2019, பிப். 1க்கு முன், நில உடைமையாளர்களாக இருக்கும் விவசாயிகள் ஏற்கனவே பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெறாமல் இருந்தால் பதிவு செய்யலாம். ஏற்கனவே ஆண்டுக்கு 3 முறை வழங்கப்படும் பி.எம்.கிசான் ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள், தனித்துவமான அடையாள எண் (எப்.ஆர்.,) பெற்றால் மட்டுமே 23 வது தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும். மதுரை மாவட்டத்தில் ஊக்கத்தொகை பெறும் விவசாயிகளில் 8060 பேர் இதுவரை, எப்.ஆர், பதிவெண் பெறவில்லை.

தகுதியுடைய 2778 விவசாயிகள் ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்கவில்லை. 2934 விவசாயிகள் இ.கே.ஒய்.சி., எனப்படும் கைரேகை பதிவு செய்யும் பணியை பூர்த்தி செய்யவில்லை. இரண்டையும் சரிசெய்தால் மட்டுமே அடுத்தடுத்த ஊக்கத்தொகை தவணை விடுவிக்கப்படும். நில உடைமை பதிவு, இ.கே.ஒய்.சி, விவசாயிகளுக்கான அடையாள எண் பெறுதல், ஆதார் எண், வங்கிக்கணக்கு எண், அலைபேசி எண்ணை பி.எம். கிசான் திட்டத்தில் இணைத்தல் போன்ற சேவைகளை சிறப்பு முகாமில் விவசாயிகள் பெறலாம். இதற்காக வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை வணிகத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இம்முகாம் வருவாய் கிராமங்கள், அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்கள், இந்திய அஞ்சல் கட்டண வங்கி, இ-சேவை மையங்களில் இன்று முதல் ஜூன் 15 வரை நடக்கிறது என தெரிவித்துள்ளார்.
Namma Madurai
Local News & Updates