Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மதுரையில் அதிகரித்து வரும் வெப்பத்தை குறைக்க பசுமை மதுரை திட்டம்
29 days ago
13 Aug 2026
மதுரையில் அதிகரித்து வரும் வெப்பத்தை குறைக்க ஒருங்கிணைந்த பசுமை மதுரை செயல் திட்டத்தை உருவாக்கக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சர்வதேச ஆய்விதழின் ஆய்வறிக்கையில், உலகின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 205 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தீவிர வெப்ப ஆபத்து நிறைந்த நகரங்களின் பட்டியலில் மதுரை 7வது இடத்தில் உள்ளது. நகரமயமாக்கல், வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதும், போதிய மாற்று மரக்கன்றுகள் நடப்படாததுமே இந்த வெப்ப அதிகரிப்பிற்கு முக்கியக் காரணம். மதுரை மாநகரில் சுற்றுச்சூழலை மீட்கவும், நகர்ப்புற வெப்பத்தை குறைக்கவும் ஒருங்கிணைந்த பசுமை மதுரை செயல்திட்டத்தை உடனடியாக வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதுதொடர்பாக ஒருங்கிணைந்த “பசுமை மதுரை” செயல் திட்டத்தை உருவாக்கக் கோரிய வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. நகரின் சுற்றுச்சூழல் நிலையை மேம்படுத்துவதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தமிழக அரசின் சம்பந்தப்பட்ட செயலர்கள் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையில் பசுமைப்பரப்பை அதிகரித்தல், மரங்களை பாதுகாத்தல் மற்றும் நகரின் வெப்பநிலையை குறைக்கும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
Namma Madurai
Local News & Updates