Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மதுரையில் காஸ் தட்டுப்பாடா: புகார் செய்தால் வீடுதேடி வருது
11 days ago
06 Apr 2026
மதுரையில் காஸ் தட்டுப்பாடு எனக்கூறி தாதமதப்படுத்திய நிறுவனம் குறித்து. 'மோடி ஆப்'பில் புகார் செய்தவருக்கு உடனே சிலிண்டர் வீடு தேடி வந்தது. மேற்காசிய நாடுகளில் ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையே கடும் போர் நடக்கிறது. இதனால் காஸ் தட்டுப்பாடு என்ற செய்தி உலா வருகிறது வணிக சிலிண்டர்களுக்கு சற்று தாமதமான நிலையில், சமீபத்தில் வீடுகளுக்கான சிலிண்டர் வினியோகிப்பதிலும் செயற்கையாக தாமதம் செய்வதாக புகார் எழுகிறது.
ஆனால் காஸ் தட்டுப்பாடு என்பது இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது. இருப்பினும் சிலிண்டர்கள் கிடைக்கவில்லை என்ற புகார் உள்ளது. இந்நிலையில் மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதி கார்த்திக் என்பவர் மார்ச் 30ல் வீட்டு சிலிண்டருக்கு புக் செய்தார். மறுநாள் அதற்கான தொகையையும் 'ஆன்லைன்' மூலம் செலுத்தினார். இருநாட்கள் கழித்தும் வராததால் அலைபேசியில் வினியோக நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, மார்ச் 20ம் தேதி வரையான புக்கிங்குகளுக்கே இப்போதுதான் வினியோகிக்கிறோம். உங்களுக்கு 15 நாட்களாவது ஆகும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஏப்3 ல் மோடி ஆப் மூலம் தாமதம் பற்றி புகார் தெரிவித்துள்ளனர். உடனே அலறி அடித்து வந்த ஏஜென்சி ஊழியர், ஏப்.4 ல் சிலிண்டரை டெலிவரி செய்தார் அத்துடன், 'நீங்கள் புக் செய்து கேட்டுக் கொண்டதன் பேரில் உடனே டெலிவரி செய்யப்பட்டது என கடிதம் வழங்குமாறு கேட்டுள்ளனர். நகர் பகுதிகளில் 25 நாட்கள், கிராமப்பகுதிகளில் 45 நாட்களுக்கு பின்பே புக் செய்ய முடியும். அதன்படி செய்தாலும் சில நிறுவனங்கள் வேண்டுமென்றெ தாமதம் செய்கின்றன. அதை மத்திய அரசின் 'மோடி ஆப்' மூலம் தெரிவித்ததால் உடனே சிலிண்டர் கிடைத்து விட்டது என்று பலனடைந்த கார்த்திக் தெரிவித்தார்.
Namma Madurai
Local News & Updates