சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது.
சித்ராபௌர்ணமியன்று பெருமாள் கள்ளழகர் வேடத்தில் தங்கக் குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி கோயிலில் இருந்து புறப்பட்டார் வழிநெடுகிலும் திருக்கண் அமைத்து பக்தர்கள் அழகரை வரவேற்று தரிசனம் செய்தனர் சனீஸ்வரன் கோயிலில் எதிர்சேவை நடந்தது.
இதைத் தொடர்ந்து கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளக்க வைகையாற்றில் இறங்கினார். தொடர்ந்து இன்று (மே 2) இரட்டை அக்ரஹாரத்தில் கிருஷ்ணன் கோயில் முன்பு இரவு 9:00 மணிக்கு தசாவதாரம் நடக்கவுள்ளது. நாளை (மே 3) இரவு 9:00 மணிக்கு வட்டப்பிள்ளையார் கோயில் அருகில் பூப்பல்லக்கு நடைபெறும். நிர்வாக அலுவலர் தாரணி, கோயில் பணியாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
Namma Madurai
Local News & Updates