Namma Madurai App Namma Madurai App
விவசாயிகளுக்கு பயிற்சி
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

விவசாயிகளுக்கு பயிற்சி

28 days ago 30 Jun 2026

Share this story

மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு ‘விளைநிலம் காப்போம்’ குறித்த பயிற்சி நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், உழவியல் துறை இணைப் பேராசிரியர் சுப்பிரமணியன் மண்ணின் நலம் குறித்து பேசினர். மதுரை வேளாண்மை கல்லுாரி டீன் சந்திரமணி பேசுகையில் ‘‘தாவரம் சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். தொழுஉரம், உயிர் உரங்கள், பூச்சிகளை கவர்ந்திழுக்கும் பொறிகளை பயன்படுத்தி ரசாயனப் பூச்சிக்கொல்லிகளை தவிர்ப்பதன் மூலம்.
வேளாண் இணை இயக்குனர் முருகேசன், விஞ்ஞானிகள் ஜெயபாரதி, முருகராகவன், அருள் அரசு, ஆனந்த் ஆகியோர் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். பங்கேற்ற 100 விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் வழங்கப்பட்டன.

Namma Madurai

Local News & Updates

More News