Namma Madurai App Namma Madurai App
திருப்பரங்குன்றத்தில் கோடை உழவுக்கு கைகொடுத்த மழை
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

திருப்பரங்குன்றத்தில் கோடை உழவுக்கு கைகொடுத்த மழை

36 days ago 07 May 2026

Share this story

திருப்பரங்குன்றம் பகுதிகளில் சில நாட்களாக பெய்துவரும் மழையானது கோடை உழவுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் அவ்வப்போது மழை பொழிவு உள்ளது. இதனால் ஓரளவு வெயில் கொடுமை குறைந்துள்ளது சமீபத்திய மழை கோடை உழவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என விவசாயிகள் கருதுகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது இரண்டு ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மானாவாரி விவசாயிகள் ஆடி 18ல் நெல் நாற்று பாவவில்லை. காய்கறிகளும் பயிரிடவில்லை. ஆழ்குழாய், கிணறுகளில் தண்ணீர் இருந்த விவசாயிகள் நெல் நாற்றுப் பாவினர்.
சமீப நாட்களாக கோடையில் மழை பெய்கிறது. இது கோடை உழவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இம் மழையால் நிலத்தடி நீர் உயரும், காலியிடங்களில் முளைக்கும் புல் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகும். இதனால் தீவனச் செலவு ஓரளவு குறையும். இம் மழை தொடர்ந்தால் கோடை உழவு செய்து ஆடி 18ல் நெல் நாற்று பால வாய்ப்பு ஏற்படும் என்றனர்.

Namma Madurai

Local News & Updates

More News