திருப்பரங்குன்றம் வட்டார மானாவாரி கண்மாய் பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் வறட்சி காரணமாக கோடை உழவையும், சாகுபடியையும் தவிர்த்து விட்டனர்.
கோடை உழவு விவசாயத்திற்கு பெரிதும் கை கொடுக்கும் என்பதால் கோடையில் அனைத்து விவசாயிகளும் நிலங்களை உழுது, தயார் படுத்தி வைப்பர். விவசாயிகள் கூறியதாவது:கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் உள்ள விவசாயிகள் கோடையில் பருத்தி, பயறு வகைகள், காய்கறிகள் பயிரிடுவர். இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டதால் கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்து விட்டது.
ஆழ்குழாய்கள், கிணறுகளில் தண்ணீர் இருக்கும் விவசாயிகளும் இந்தாண்டு கோடை விவசாயத்தை தவிர்த்து விட்டோம். வறட்சி, தொழிலாளர் பற்றாக்குறை, கூலி உயர்வு, காய்கறிகளுக்கு போதுமான விலை கிடைக்காததால் இந்தாண்டு முற்றிலும் கோடை சாகுபடியையே தவிர்த்து விட்டோம் என்றனர்.
Namma Madurai
Local News & Updates