Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மதுரை மாநகராட்சியில் பசுமை மற்றும் அழகுபடுத்தும் பணிகள்
14 days ago
28 Aug 2026
மதுரை நகரை பசுமையாகவும், தூய்மையாகவும், அழகாகவும் மாற்றும் நோக்கில் மாநகராட்சி சார்பில் பல்வேறு நகர்ப்புற பசுமை மற்றும் அழகுபடுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சாலைகளின் மையத் தடுப்புகள், ரவுண்டானாக்கள் மற்றும் முக்கியமான பொது இடங்களில் பூச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. குறிப்பாக அண்ணாநகர் மற்றும் கே.கே.நகர் பகுதிகளில் உள்ள சென்டர் மீடியன்கள் பசுமையாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், நத்தம் மேம்பாலம், அண்ணா மாளிகை சுற்றுப்பகுதி மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரப் பகுதி போன்ற இடங்களில் சுவர் ஓவியங்கள், பூங்கா பராமரிப்பு மற்றும் அழகுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. வண்டியூர் பகுதியில் வைகை ஆற்றங்கரையோரம் புதிய மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்று மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் சுமார் 5 லட்சம் மரக்கன்றுகளை நடுவது ஆகும். மரக்கன்றுகளுக்காக மாநகராட்சி சார்பில் நாற்றுப்பண்ணைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நகரின் பசுமைப் பரப்பு அதிகரிப்பதுடன், வெப்பநிலையை குறைக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு ஆரோக்கியமான நகர்ப்புற சூழலை உருவாக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Namma Madurai
Local News & Updates