Namma Madurai App Namma Madurai App
பாலம் கட்ட பூமி பூஜை
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

பாலம் கட்ட பூமி பூஜை

42 days ago 06 Mar 2026

Share this story

அலங்காநல்லுார் - குறவன்குளம் செல்லும் ரோட்டில் பெரியாறு பாசன கால்வாயில் கட்டப்பட்ட பழமையான வண்டிப்பாதை பாலம் சேதமடைந்தது.
இந்த பாலத்தை புதிதாக கட்ட அப்பகுதியினர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வந்தனர். நேற்று ரூ.1.85 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை நடந்தது. நகரச் செயலாளர் ரகுபதி தலைமை வகித்தார். வெங்கடேசன் எம்.எல்.ஏ, துவக்கி வைத்தார். கவுன்சிலர் அம்சவல்லி வரவேற்றார்.
பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, ஒன்றிய செயலாளர் அருண்குமார், துணைத் தலைவர் சாமிநாதன், செயல் அலுவலர் சிவக்குமார், கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

Namma Madurai

Local News & Updates

More News