Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மதுரை அரசு மருத்துவமனையில் இடநெருக்கடி: சீரமைப்பு தேவை: சுகாதாரக்கேடாக்கும் நோயாளிகளின் உறவினர்கள்
28 days ago
06 May 2026
குப்பைத்தொட்டி இருந்தாலும் குப்பையை வெளியில் போடுவது, இருக்கை வசதி இருந்தாலும் ரோட்டில் அமர்வது என நோயாளிகளின் உறவினர்கள் சுகாதாரக்கேடாக பயன்படுத்துவதால் மதுரை அரசு மருத்துவமனையை பராமரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மகப்பேறு வார்டுக்கு எதிரிலுள்ள காரிடாரை ஒட்டியுள்ள காலியிட இருக்கைகளில்தான் நோயாளிகளின் உறவினர்கள் அமர்கின்றனர். நுழைவுவாசலை அடுத்து மகப்பேறு வார்டைத் தாண்டினால் தான் மற்ற வார்டுகளுக்கு செல்ல முடியும். ஆம்புலன்ஸ்கள் கூட இந்த இடத்தை கடந்து செல்ல முடியாத அளவு எந்நேரமும் கூட்டமாக நிற்கின்றனர். இந்த இடத்திற்கு மேல் தளத்தில் உள்ள காரிடாரை காத்திருப்பு இடமாக மாற்றி இருக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் மக்கள், முதல் மாடியை பயன்படுத்துவதில்லை.
தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர், நிதியில் இருந்து இ-டாய்லெட் இயந்திரம் வழங்கப்பட்டு காலியிடத்தில் வைக்கப்பட்டது. இந்த டாய்லெட்டையும் முறையாக பயன்படுத்தாததால் பழுதடைந்து காட்சிப் பொருளாக உள்ளது. சிமென்ட் பெஞ்ச் இருக்கைகளின் இருபுறமும் பெரிய குப்பைத்தொட்டிகள் இரண்டு வைக்கப்பட்டு உள்ளன. சாப்பிட்ட இலை, காகிதம், மீத உணவுடன் டப்பா ஆகியவற்றை இருக்கைக்கு அருகிலேயே விட்டுச் செல்கின்றனர். இதனால் எலிகள் அங்கேயே குடியிருந்து பொந்துகளை உருவாக்கியுள்ளன. குப்பையை தொட்டியில் போட வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தமிழில் விழிப்புணர்வு குரலில் ஒலிபெருக்கியில் தெரிவித்தாலும் பயனில்லை.
30 படுக்கைகளுடன் கூடிய ஒரு வார்டில் நோயாளிகளுடன் இரு உறவினர்கள் வீதம் 90 பேர் தங்கி கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் கழிப் பறைக்குள் துண்டு, சேலை, போர்வை திணித்து விடுவதால் குழாய்க்குள் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேற முடிவதில்லை. நோய்த்தொற்றால் நோயாளிகளும், அவற்றை சுத்தம் செய்வதால் துாய்மைப்பணியாளர்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே பழைய இ.சி.ஜி, வார்டு, பழைய லித்தோட்ரிப்சி காரிடாருக்கு அருகில் இரண்டு இடங்களை காத்திருப்பு அறைகளாக மாற்ற முடிவு செய்து, துாத்துக்குடி துறைமுக நிறுவனத்தின் சி.எஸ்.ஆர், நிதியில் இருந்து ரூ.75 லட்சம் பெற்றுள்ளோம். டைனிங் டேபிள், கழிப்பறை, குளியலறை வசதியுடன் இரண்டு காத்திருப்பு அறைகள் கட்டப்படும் இரு அறைகளும் கட்டப்பட்ட பின் மகப்பேறு எதிரிலுள்ள காலியிடத்தின் இருக்கைகளை அகற்றி ஆம்புலன்ஸ் செல்வதற்கான வழியை அகலப்படுத்த உள்ளோம் என்றார்.
Namma Madurai
Local News & Updates