Namma Madurai App Namma Madurai App
மதுரை விமான நிலையத்தில் எபோலா வைரஸ் கண்காணிப்பு 1169 பயணிகளிடம் ஆய்வு
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மதுரை விமான நிலையத்தில் எபோலா வைரஸ் கண்காணிப்பு 1169 பயணிகளிடம் ஆய்வு

5 days ago 29 May 2026

Share this story

மதுரை விமான நிலையத்தில் மே 17 முதல் தற்போது வரை 1169 பயணிகளுக்கு தெர்மல் கேமரா பரிசோதனை, எபோலா வைரஸ் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க நாடுகளான காங்கோ, தெற்கு சூடான், உகாண்டா நாடுகளில் எபோலா வைரஸால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. எனவே மதுரை விமான நிலையத்திற்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளுக்கு தெர்மல் கேமரா மூலம் காய்ச்சல் உள்ளதா என கண்காணிக்கப்படுகிறது. காய்ச்சல் இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு முகவரி, வெளிநாட்டு பயண விவரங்கள் சேகரிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். மே 17 ம் முதல் எபோலா வைரஸ் குறித்த ஆய்வு நடக்கிறது. தற்போது வரை தினமும் மதுரை வரும் இலங்கை விமான பயணிகள் 1169 பேரிடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பொற்செல்வன் தெரிவித்தார்.
மதுரையில் நேற்று 13 பேர் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் உட்பட 52 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்று, டெங்கு வைரஸ் பதிவாகவில்லை.

Namma Madurai

Local News & Updates

More News