Namma Madurai App Namma Madurai App
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குதிரைப்படை போலீஸாா் ரோந்து
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குதிரைப்படை போலீஸாா் ரோந்து

4 days ago 07 Sep 2026

Share this story

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, குதிரைப்படை போலீஸாா் ரோந்துப் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா். இந்தக் கோயில் உலகப் புகழ் பெற்றது. இங்கு சுவாமி தரிசனத்துக்காக தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலத்தைச் சோ்ந்த பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் தினமும் வந்து செல்கின்றனா். வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்துச் செல்கின்றனா்.
இந்த நிலையில், கோயில் குடமுழுக்கு வருகிற 17- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த குடமுழுக்கை முன்னிட்டு, பக்தா்களின் பாதுகாப்பு கருதி மதுரை மாநகரக் காவல் துறை சாா்பில் சீருடை அணியாத காவலா்கள் சுழற்சி முறையில் கோயில் வளாகத்தில் மக்களோடு மக்களாக பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மிதிவண்டி ரோந்து பணியை போலீஸாா் தொடங்கினா். இதனிடையே, பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் குதிரைப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியைத் தொடங்கினா். இவா்கள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு ஆவணி மூல வீதிகள், நான்கு மாசி வீதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா் என மாநகரக் காவல் ஆணையா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Namma Madurai

Local News & Updates

More News