Namma Madurai App Namma Madurai App
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் 45 கிலோ தங்க நகைகள் டிபாசிட்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் 45 கிலோ தங்க நகைகள் டிபாசிட்

38 days ago 10 Mar 2026

Share this story

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காணிக்கையாக செலுத்தப்பட்டு, பயன்படுத்த முடியாத 45 கிலோ நகைகள் வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டது. இதன்மூலம் கோயிலுக்கு ஆண்டுதோறும் ரூ.2 கோடிக்கும் மேல் வருவாய் கிடைக்கும். ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ் 44,301 கோயில்கள் உள்ளன. அதிக வருவாய் வரக்கூடிய கோயில்களில் காணிக்கையாக செலுத்தப்பட்டு, பயன்பாடில்லாத தங்க நகைகளை உருக்கி, கட்டியாக்கி மும்பை ஸ்டேட் வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 1977 முதல் இம்முறை உள்ளது. இதில் இருந்து கிடைக்கும் வட்டி தொகையை வைத்து கோயில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீனாட்சி கோயிலில் பயன்பாடில்லாத நகைகளை மதுரை மண்டலத்திற்கான ஓய்வுபெற்ற நீதிபதி மாலா தலைமையிலான குழு கணக்கெடுத்தது இதன்படி பயன்பாடில்லாத 45 கிலோ தங்க நகைகள் உருக்கப்பட்டு ஸ்டேட் வங்கியில் டிபாசிட் செய்வதற்காக நேற்று முறைப்படி வழங்கப்பட்டது இக்கோயிலில் இருந்து ஏற்கனவே 2000, 2007, 2011ல் தங்க நகைகள் டிபாசிட் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் நேற்று சமயபுரம் மாரியம்மன் கோயில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், பண்ணாரி மாரியம்மன் கோயில் உட்பட 8 கோயில்களின் பயன்பாடில்லாத 296 கிலோ 600 கிராம் எடையுள்ள தங்க நகைகளும் டிபாசிட் செய்யப்பட்டன.

Namma Madurai

Local News & Updates

More News