மேலுார் நகராட்சியில் வீடுகளுக்கான காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், மக்களுக்கு சுகாதாரமற்ற தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
திருச்சி, குளித்தலையில் இருந்து வரும் காவிரி குடிநீரை மேலுார் காந்திஜி பூங்காவில் நீரேற்று நிலையம் அமைத்து தாலுகா முழுவதும் விநியோகிக்கின்றனர். ஐந்தாவது வார்டு அண்ணா காலனி மேல் நிலைத் தொட்டியில் ஏற்றப்படும் தண்ணீர், சந்தைப் பேட்டை வ.உசி, நகர், முகமதியர் புரம், பிஸ்மில்லா நகர் பகுதிக்கு விநியோகிக்கப்படுகிறது. இதில் சந்தைப் பேட்டையில் குழாய் உடைந்து தண்ணீர் ரோட்டில் வீணாகிறது. அப்பகுதி மக்கள் கூறியதாவது: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியத்தில் பணம் கொடுத்து குடிநீர் வாங்குவதால், இலவசமாக விநியோகிக்கப்படும் தெருக்குழாய்கள் துண்டிக்கப்பட்டன.
எனவே வீட்டுக் குழாயில் வரும் தண்ணீருக்கு நகராட்சிக்கு வரி கட்டுகிறோம். இப்பகுதி குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பலநாட்களாக தண்ணீர் ரோட்டில் வீணாகிறது. அதனால் சுகாதாரமற்ற தண்ணீர் வருகிறது. நகராட்சி நிர்வாகம் குழாயை உடனே சரி செய்து துாய குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்
Namma Madurai
Local News & Updates