Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
நாளை யு.பி.எஸ்.சி., தேர்வு மதுரையில் 5713 பேர் பங்கேற்பு
11 days ago
23 May 2026
மதுரை: மதுரையில் நாளை(மே 24) 16 மையங்களில் நடக்கும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.,) குடிமைப்பணிகள் முதன்மைத் தேர்வில் 5713 பேர் பங்கேற்கின்றனர். கலெக்டர் பிரவீன்குமார் கூறியதாவது: மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்காக சாய்தளம், சக்கர நாற்காலி, தரைத்தள அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்வு மையங்களுக்கு காலை அமர்விற்கு 9:00 மணி, மதிய அமர்விற்கு 2:00 மணிக்கு வர வேண்டும். தேர்வர்கள் பென்சில், பேனா, இ--அட்மிட் கார்டு, போட்டோ, அடையாள அட்டை எடுத்து வரவேண்டும். அலைபேசி, டிஜிட்டல் கடிகாரம், தகவல் தொடர்பு சாதனங்கள், பைகளுக்கு அனுமதி இல்லை. சாதாரண 'அனலாக் விரிஸ்ட் வாட்ச்' மட்டும் அனுமதிக்கப்படும். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு பணிகளை கண்காணிக்க 5 நடமாடும் குழுக்கள், 16 உள்ளூர் ஆய்வு அலுவலர்கள், 16 உதவி மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)பார்த்திபன், அலுவலர்கள் உடனிருந்தனர்.
Namma Madurai
Local News & Updates