புதுடில்லியில் பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கட்டமைப்பு சார்பில் தேசிய சிலம்ப போட்டி நடந்தது. 600க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் பரவை ஆசான் காட்டுராஜா இலவச சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்கள் 21 பேர் பயிற்சியாளர்கள் இன்பவள்ளி, முத்துநாயகம் தலைமையில் பங்கேற்றனர்.
ஒற்றைகம்பு 12 வயது பிரிவில் யோகேஷ், 13 வயதில் சாய்பிரசாத், முகேஷ் கண்ணா, தீனதயாளன் முதல்பரிசும், சர்வேஸ்வரன் 2ம் பரிசும், இரட்டை கம்பு 12 வயது பிரிவில் ககன் ஸ்ரீ, 13 வயதில் ஹஸ்வந்த் 2ம் பரிசு, 14 வயதில் திலிபன் முதல் பரிசும் பெற்றனர். வாள்வீச்சு, இரட்டை வாள் 11, 12, 15, 16 வயது பிரிவில் சங்கரி, நாகமுத்து, பிரகதீஷ், ராஜநிவாஸ், அனுஷா முதல் பரிசும், மான் கொம்பு 13, 14, 15 வயது பிரிவில் மணிகண்டன், ஆதர்ஷ்சனா, சிவ கீர்த்திகா, யோகேஷ் பாண்டி முதல் பரிசும், சுருள்வாள் 11, 13, 14, 15 வயது பிரிவில் வேணுகோபால், ஹரிஹரன், விக்ரம், சாதனாஸ்ரீ முதல் பரிசு பெற்றனர்.
Namma Madurai
Local News & Updates