Namma Madurai App Namma Madurai App
வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
Back HEALTH NEWS
HEALTH NEWS

வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

38 days ago 10 Mar 2026

Share this story

பிறவியிலேயே வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன் சிகிச்சை, சென்னைக்கு அடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது என்கிறார் அகச்சுரப்பியல் துறைத்தலைவர் டாக்டர் ஸ்ரீதர். அவர் கூறியதாவது: உயர வளர்ச்சி குறைபாடு என்பது ஒருவகை நோய் குழந்தை பிறக்கும் போது 50 செ.மீ, உயரமும் ஒரு வயதில் 75 செ.மீ, ஆக உயரமும் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 12 செ.மீ, வீதம் நான்கு வயதில் 1 செ.மீ. உயரம் வளர்வது இயல்பானது. பெண் குழந்தைகள் பூப்பெய்தும் வரை ஆண்டுதோறும் 6 செ.மீ, அளவிற்கு வளர வேண்டும். இது குறைந்தால் அதை உயர வளர்ச்சி குறைபாடு என்கிறோம்.
மூளையில் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கக்கூடிய வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு தான் உயர வளர்ச்சிக்கு காரணம். குழந்தைகளின் பெற்றோர் குட்டையாக இருந்தாலோ, பிறக்கும் போது எடை குறைவாக இருந்தாலோ, ரத்த உறவுகளுக்குள் திருமணம், தைராய்டு, எலும்பு வளர்ச்சி குறைபாடும் காரணங்களாக இருக்கலாம். மரபணு ரீதியான குறைபாடு, எலும்பு வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தாலும் பெரிய மாற்றம் இருக்காது. வளர்ச்சி ஹார்மோன் குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த ஹார்மோனை ஊசி மூலம் உடலில் செலுத்த முடியும். தமிழகத்தில் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை அகச்சுரப்பியல் துறையின் கீழ் இத்தகைய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 15 மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் மதுரையில் சிகிச்சை பெற வருகின்றனர்.
முதல்வரின் இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம், தேசிய சுகாதார இயக்கத் திட்டத்தின் அரிய நோய் சிகிச்சையின் கீழ் நோயாளிகளுக்கு வளர்ச்சி ஹார்மோன் பரிசோதனை, ஐ.ஜி.எப், 1 இலவச ரத்தப்பரிசோதனையும், சிகிச்சைக்கான ஊசி இலவசமாக வழங்கப்படுகிறது. ஆரம்ப நிலை அவசியம் குழந்தை பிறந்த நான்காண்டுகளுக்குள் வளர்ச்சி குறைபாட்டை கண்டறிந்து சிகிச்சைக்கு வந்தால் குறைந்தபட்சம் 12 வயது வரை வளர்ச்சிக்கான ஹார்மோன் ஊசி தினமும் செலுத்தப்படும். இன்சுலின் ஊசி போல தினமும் இரவில் அந்த ஊசியை நோயாளியின் உடலில் செலுத்த வேண்டும். தினந்தோறும் என்பதற்கு பதிலாக வாரம் ஒருமுறை செலுத்தும் ஹார்மோன் ஊசி அறிமுகமாகியுள்ளது இதுவும் இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Namma Madurai

Local News & Updates

More News