Namma Madurai App Namma Madurai App
மதுரையில் 14 மையங்களில் நீட்தேர்வு: 8578 பேர் எழுத உள்ளனர்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மதுரையில் 14 மையங்களில் நீட்தேர்வு: 8578 பேர் எழுத உள்ளனர்

36 days ago 28 Apr 2026

Share this story

மதுரை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) மூலம் நடத்தப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) மதுரை மாவட்டத்தில் 14 மையங்களில் நடக்கிறது. மே 3ல் நடக்கும் இத்தேர்வுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு தடையற்ற மின்சார வினியோகம், மருத்துவ உதவி, போக்குவரத்து குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நேற்று நடந்தது.
மதுரையில் யாதவர் ஆண்கள் கல்லுாரியில் ஏ, பி என 2 மையங்கள், செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரியில் ஏ, பி என 2 மையங்கள். நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி, ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாகமலைப்புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி, இ.எம்.ஜி.,யாதவர் பெண்கள் கல்லுாரியில் 2 மையங்கள், டி.வி.எஸ், உயர்நிலைப்பள்ளி, திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளி, அழகர்கோயில் ரோட்டில் உள்ள மதுரை காமராஜ் பல்கலைக் கழக கல்லூரி என 14 மையங்களில் இத்தேர்வு நட க்கிறது.
இம்மையங்களில் மொத்தம் 8578 மாணவர்கள் நீட்தேர்வில் பங்கேற்க உள்ளனர் என்றார்.

Namma Madurai

Local News & Updates

More News