Back
SPORTS NEWS
SPORTS NEWS
விளையாட்டில் சாதித்தாலும் வேலைவாய்ப்பு நிச்சயம் இந்திய கபடி பெண்கள் அணி பயிற்சியாளர் கவிதா தகவல்
43 days ago
05 Mar 2026
மதுரை 'விளையாட்டில் சாதித்தாலும் வேலைவாய்ப்பு நிச்சயம் 'என மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, ஆர்.எல் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் சார்பில் கல்லூரி வளாகத்தில் நடந்த 31வது விளையாட்டு விழாவில், இந்திய பெண்கள் கபடி அணி பயிற்சியாளர் கவிதா தெரிவித்தார்.இந்நிகழ்ச்சிக்கு முதல்வர் சுஜாதா வரவேற்றார் இந்திய பெண்கள் கபடி அணி பயிற்சியாளர் கவிதா தேசிய கொடியேற்றினார். கல்லூரி செயலாளர் டாக்டர் எல். ராமசுப்பு ஒலிம்பிக் கொடியேற்றினார் முதல்வர் சுஜாதா துணை முதல்வர் குரு பாஸ்கர கல்லுாரி கொடியேற்றினர்.உடற்பயிற்சி துறை இயக்குனர் பாண்டியராஜன் விளையாட்டு அறிக்கை வாசித்தார்
படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் சர்வதேச, தேசிய அளவில் பதக்கம் வென்றால் தமிழக அரசின் குரூப் 2,3ல் அனைத்து துறைகளிலும் விளையாட்டு கோட்டா மூலம் வேலை வாய்ப்பு பெறலாம். ஏழ்மை நிலையில் இருந்த என் தலைமுறையை விளையாட்டின் மூலம் மாற்றியுள்ளேன். விளையாட்டில் ஈடுபாட்டுடன் இருந்தால் வாழ்க்கை முறையே மாறி விடும் கேரம், செஸ், கபடி, கிரிக்கெட் என எந்த விளையாட்டாக இருந்தாலும் தமிழக அரசு பரிசுத்தொகை வழங்குகிறது. நீங்கள் கஷ்டப்பட்டு படித்து தேர்வெழுதினால் கூட சில நேரங்களில் வேலை கிடைக்காமல் போகலாம் தேர்வில் 99 சதவீத மதிப்பெண் பெற்றவர்களை விட விளையாட்டு கோட்டாவில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை உண்டு. பல்வேறு கல்லூரிகளில் விளையாட்டு வீரர்களுக்கு இலவச விடுதியுடன் கூடிய மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கின்றனர். விளையாட்டு, சாதனை என்பது சாதாரண விஷயமல்ல அதற்கு உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் விளையாட்டு துறையில் இருந்தால் ஆரோக்கியமாக இருப்பீர்கள் குழு விளையாட்டுகளில் விளையாடும் போது வாழ்க்கைக்கான நிறைய விஷயங்களை கற்றுத்தருகிறது. அணியில் பலவிதமான மனநிலையுடன் உள்ளவர்களுடன் பழகும் போது வெளியுலகம் புரிந்து கொள்ள முடியும் அதற்கு அலைபேசியில் இருந்து முதலில் மீண்டு வரவேண்டும்.
யாராவது நம்மை வார்த்தைகளால் காயப்படுத்தினால் பதிலுக்கு பேசாமல் நமது திறமையின் மூலம் வெற்றி பெற்று நம்மை அவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். சொத்து, சுகம் இருந்தாலும் சாதித்தால் தான் அடுத்தடுத்த தலைமுறையினரும் நமது பெயரைச் சொல்வார்கள். அதுபோன்று மாணவர்களாகிய நீங்களும் சாதிக்க வேண்டும் என்றார். ராக்கர்ஸ், திரில்லர்ஸ் அணிகள் வெற்றி பெற்று சுழற் கோப்பையை வென்றன. டீன் பிரியா, பேராசிரியர்கள் அனுராதா, பத்மாவதி, பிரபு, வைரமுத்து, நிர்வாக அதிகாரி லட்சுமணன் ஏற்பாடுகளை செய்தனர்.
Namma Madurai
Local News & Updates