அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் நிலை உயர்த்தப்பட்டதையடுத்து இணை கமிஷனரை நியமித்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
வருமான அடிப்படையில் கள்ளழகர் கோயிலின் செயல் அலுவலர் பதவி, துணை கமிஷனரில் இருந்து இணை கமிஷனராக நிலை உயர்த்தப்பட்டது. இதையடுத்து சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் துணை கமிஷனர் ஹரிஹரனுக்கு, கள்ளழகர் கோயில் இணை கமிஷனராக தற்காலிக பதவி உயர்வு அளித்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
விரைவில் அவர் பதவி ஏற்கவுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Namma Madurai
Local News & Updates