Namma Madurai App Namma Madurai App
டிப்ளமோ ஆசிரியர் தேர்வு விண்ணப்பம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

டிப்ளமோ ஆசிரியர் தேர்வு விண்ணப்பம்

29 days ago 19 Mar 2026

Share this story

பேரையூர் தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு தனித் தேர்வர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆனந்தி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது. மே, ஜூன் மாதம் நடக்க உள்ள தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனித் தேர்வர்கள் 26.3.2026 முதல் 3.4.2026 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வழங்கலாம்.
தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் இணைத்து, தேர்வர்கள் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் மதுரை மாவட்டத்தில் இப்பயிற்சி மையம் டி. கல்லுப்பட்டியில் அமைந்துள்ளது என்றார்.

Namma Madurai

Local News & Updates

More News