சோழவந்தான் சித்தி விநாயகர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. முருகன், வள்ளி, தெய்வானைக்கு 11 வகை அபிஷேகங்கள் நடந்தன.
யாக பூஜைகள் செய்யப்பட்டு வள்ளி, தெய்வானைக்கு, திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அர்ச்சகர் சண்முகம் தலைமையில் பூஜைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் சிதம்பரம், சத்தியநாதன், சரவணகுமார் ஏற்பாடு செய்தனர்.
Namma Madurai
Local News & Updates