மதுரையில் பாலங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தாததால் விபத்து, குற்றங்களை கண்காணிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலமடை சந்திப்பில் ரூ.150 கோடி செலவில் வேலுநாச்சியார் பாலம், கோரிப்பாளையத்தில் ரூ.196 கோடி செலவில் சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலங்கள், பைபாஸ் ரோடு வ.உசி, பாலம், தெற்குவாசல் பாலம் உள்ளிட்ட சில பாலங்களில் நத்தம் பறக்கும் பாலத்தில் இருப்பது போல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை.
இதனால் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்தும், குற்றங்கள் நடந்தால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாமலும் போலீசார் சிரமப்படுகின்றனர். சமீபத்தில் வ.உசி, பாலத்தில் முதியவர் ஒருவர் விபத்தில் சிக்கினார். வாகனத்தில் வரும்போது தானாக விழுந்தாரா அல்லது வாகனம் மோதி விழுந்தாரா என போலீசார் உறுதிசெய்வதற்குள் சோர்ந்து விட்டனர். விபத்தின் தன்மை தெரியாததால் யார் விசாரிப்பது என்று எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கும். போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசாருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதுபோன்ற அசவுகரியங்கள் உள்ளதால் உடனே அனைத்து பாலங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த கமிஷனர் லோகநாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Namma Madurai
Local News & Updates