Namma Madurai App Namma Madurai App
நுாலகத்தில் கருத்தரங்கம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

நுாலகத்தில் கருத்தரங்கம்

39 days ago 09 Mar 2026

Share this story

மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில், 'மனித விண்வெளி பயணத்திட்டம்' என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
சதீஷ் தவான் விண்வெளி மைய முன்னாள் இணை இயக்குநர் ரா.வெங்கடராமன் பங்கேற்று பேசினார் இந்தியாவின் கனவுத் திட்டமான 'ககன்யான்' திட்டம் குறித்தும், விண்வெளி வீரர்களுக்கான சிறப்பு உடைகள், துணை அமைப்புகள், விண்கலத்தை மீட்கும் நடைமுறைகள் குறித்தும் படக்காட்சிகள் மூலம் விளக்கினார்.
அறிவியல் ஆர்வலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்தன.

Namma Madurai

Local News & Updates

More News