Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறை ஏற்க உயர் நீதிமன்றம் பரிந்துரை
46 days ago
18 Apr 2026
மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவில் நிர்வாகத்தை, அரசின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர, அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரைத்தது.மதுரை, பாண்டி முனீஸ்வரர் கோவிலில், பரம்பரை பூசாரி உரிமை அடிப்படையில் சுழற்சி முறையில் பூஜை மேற்கொள்ள அனுமதி கோரியதில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக சீதாலட்சுமி, தனம், பாண்டீஸ்வரி, ஆர்நதி, ஜெகதீஸ் பாண்டியன் மேல்முறையீடு செய்தனர்
அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன், கூடுதல் வழக்கறிஞர் அசோக் ஆஜராகினர். நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: மதம் என்பது செல்வத்தை சேர்ப்பதற்கான ஒரு போர்வையல்ல. பக்தியை பயன்படுத்தி பண ஆதாயம் தேடுவதும் ஏற்புடையதல்ல. இவ்வழக்கு, ரொட்டிக்காக குரங்குகள் சண்டையிடும் கதையை போன்றது.
மதுரையின் காவல் தெய்வமாக போற்றப்படும் பாண்டி முனீஸ்வரர் கோவில் பூசாரிகள், கடவுளுக்கு சேவையாற்றும் நோக்கமின்றி, மாறாக தங்கள் சொந்த ஆதாயம், ஆடம்பரம், சுகபோக வாழ்க்கைக்காக மட்டுமே பக்தர்கள் காணிக்கையாக தட்டில் செலுத்துவதை மற்றும் உண்டியல் வசூல்களை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக சண்டையிட்டு வருகின்றனர்.
Namma Madurai
Local News & Updates