Namma Madurai App Namma Madurai App
மே 13 முதல் 15 வரை மியூசிய தினப் போட்டி
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மே 13 முதல் 15 வரை மியூசிய தினப் போட்டி

27 days ago 07 May 2026

Share this story

சர்வதேச மியூசிய தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்களுக்கான ஓவியம், வினாடி வினா, கட்டுரைப் போட்டிகள் மே 13 முதல் 15 வரை நடத்தப்படுகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு' என்னும் தலைப்பில் மே 13 காலை 10:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, 6 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடத்தப்படும். ஓவியத்தின் அளவு, வர்ணம் குறித்த நிபந்தனை இல்லை. 'நவீன உலகில் காந்தியத்தின் ஏற்புடைமை' என்னும் தலைப்பில் பொதுமக்கள் கட்டுரை எழுதி மே 14 மாலை 5:00 மணிக்குள் காந்தி மியூசிய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். பக்க வரம்பு இல்லை.
மே 15 காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை 'இந்திய விடுதலை இயக்கம்' குறித்த வினாடி வினா போட்டி, ஆறாம் வகுப்பு முதல் கல்லுாரி வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்படும். விரும்புவோர் 8610094881 ல் பெயரை பதிவு செய்ய வேண்டும் என, செயலாளர் நந்தா ராவ் தெரிவித்துள்ளார்.

Namma Madurai

Local News & Updates

More News