Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
குன்றத்தில் தேரோட்டத்திற்கு கிராமத்தினருக்கு அழைப்பு: ஏப்.5 ல் நடக்கிறது
119 days ago
30 Mar 2026
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் ஏப் 5ல் நடக்கிறது. இதில் வடம் பிடித்து தேர் இழுக்க பாரம்பரிய முறைப்படி கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் ஏப். 4ல் நடக்கிறது. மறுநாள் கோயில் முன்பு நிலை நிறுத்தியுள்ள பெரிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள்வர். திருப்பரங்குன்றம் பகுதியின் 43 கிராமத்தினர், பக்தர்கள், பொதுமக்கள் வடம் பிடித்து இழுக்க மலையைச் சுற்றி தேர் வலம் வரும்.
பாரம்பரிய அழைப்பு: தேர் இழுக்க முக்கியஸ்தர்கள், கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி கோயில் முதல் ஸ்தானிக சிவாச்சாரியார் சுவாமிநாதன் தலைமையில் நேற்று துவங்கியது. வசந்த் ஸ்தானிகர், கிராம நாட்டாமை சுகி, கர்ணம் வீரபத்திரன், வைராவி செல்வக்குமார், நாட்டாமைகள் ரத்தினம், முத்துக்குமார், காவல் தலையாரி மகாராஜன், மிராசு காவல்காரர்கள் வெற்றி வேல்முருகன், கண்ணன் ஆகியோர் வீடு வீடாகச் சென்று வெற்றிலை, பாக்கு, திருவிழா பத்திரிக்கை, விபூதி, சந்தனம் கொடுத்து அழைத்தனர். ஆண்டாண்டு காலமாக பாரம்பரிய முறைப்படி இந்த அழைப்பு நடப்பது குறிப்பிடத்தக்கது
Namma Madurai
Local News & Updates