Namma Madurai App Namma Madurai App
மாநில ஹாக்கி போட்டி போலீஸ் அணி சாம்பியன்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மாநில ஹாக்கி போட்டி போலீஸ் அணி சாம்பியன்

59 days ago 17 Feb 2026

Share this story

திருநகர்: திருநகரில் நடந்த மாநில ஹாக்கி போட்டியில் சென்னை போலீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் பாலசுப்பிரமணியன், ஜெய்சிங், பழனியாண்டவர். மெய்யப்பன் நினைவு 27வது மாநில ஹாக்கி போட்டிகள் பிப்சல் துவங்கியது 'நாக் அவுட் முறையில் நடந்த இப்போட்டிகளில் 30 அணியினர் பங்கேற்றனர். இறுதிப்போட்டியில் சென்னை போலீஸ் அணியினர் 'டை பிரேக்கர்' முறையில் 42 என்ற கோல் கணக்கில் சென்னை ஜி.எஸ்.டி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். கோலில்பட்டி ஹாக்கி எக்ஸலன்ஸ் அணியினர் 3ம் பரிசு, சென்னை சிட்டி போலீஸ் அணியினர் 4ம் பரிசும் பெற்றனர்.
பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட ஹாக்கி சங்கத்தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். மதுரை தெற்கு தி.மு.க, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா, திருமங்கலம் ஒன்றிய செயலாளர் தங்கபாண்டி, ஓய்வு போலீஸ் எஸ்.பி. மணிவண்ணன், சேஷா டிரஸ்ட் நிறுவனர் சிவக்குமார், டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை பரிசு வழங்கினார்.

சிறந்த கோல்கீப்பராக போலீஸ் அணி வீரர் சாலமன், தற்காப்பு ஆட்டக்காரராக ஜி.எஸ்.டி. அணி வீரர் சூரஜ், நடு கள ஆட்டக்காரராக எக்ஸலன்ஸ் அணி வீரர் அரவிந்த், சிறந்த முன்கள ஆட்டக்காரராக போலீஸ் அணி வீரர் சரவணன், சிறந்த இளம் வீரராக திருநகர் ஹாக்கி கிளப் அணி வீரர் சஸ்வந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. ஹாக்கி கிளப் செயலாளர் ரமேஷ் ஒருங்கிணைத்தார்.

Namma Madurai

Local News & Updates

More News