Namma Madurai App Namma Madurai App
மருத்துவர்கள் சங்க மாநாடு
Back HEALTH NEWS
HEALTH NEWS

மருத்துவர்கள் சங்க மாநாடு

23 days ago 11 May 2026

Share this story

மதுரையில் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவ சங்கத்தின் மாநில மாநாடு நடந்தது.
மதுரை மருத்துவக் கல்லுாரி டீன் டாக்டர் அருள் சுந்தரேஷ் குமார் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். தமிழ்நாடு மகப்பேறு, மகளிர் நலம் டாக்டர்கள் கூட்டமைப்பு தலைவர் வித்யா, மதுரை சங்க மகப்பேறு டாக்டர்கள் சங்கத் தலைவர் காயத்ரி, அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் உயர் ஆபத்து கர்ப்ப சிகிச்சை, கருத்தரிப்பு சிகிச்சையில் முன்னேற்றம். கர்ப்ப கால லேப்ராஸ்கோபிக் சிகிச்சை குறித்த செய்முறை அனுபவங்கள், அறிவியல் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் நடந்தன. தாய் மற்றும் குழந்தை நல பாதுகாப்பு தொடர்பான மருத்துவ அணுகுமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் வளர்மதி, சங்க செயலாளர் டாக்டர் சுதா, பொருளாளர் டாக்டர் ஆனந்தி பங்கேற்றனர்.

Namma Madurai

Local News & Updates

More News